வெற்றியுடன் விடைபெற்ற மிஸ்பா, யூனிஸ்கான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெற்றியுடன் விடைபெற்ற மிஸ்பா, யூனிஸ்கான்

டோமினிகா: வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டெஸ்ட் டோமினிகா வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாக்.

376 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ்  247 ரன்னும் எடுத்தன. 129 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான், 8 விக்கெட் இழந்து 174 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 304 இலக்குடன் களம் இறங்கிய வெ. இண்டீஸ் 4ம் நாள் முடிவில் ஒருவிக்கெட் இழந்து 7 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று 202 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.



அதிகபட்சமாக சேஸ் ஆட்டம் இழக்காமல் 101 ரன் எடுத்தார்.   பாக், தரப்பில் யாஷிர் ஷா 5, ஹசன் அலி 3 விக்கெட் எடுத்தனர். 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாக்.

தொடரை 2-1 என கைப்பற்றியது. சேஸ் ஆட்ட நாயகன் விருதும், யாசிர்ஷா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

43 வயதான பாக். கேப்டன் மிஸ்பா, 40 வயதான பேட்ஸ்மேன் யூனிஸ்கான் ஆகியோர் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றனர்.



கடைசி போட்டியில் யூனிஸ்கான் 53 (18, 35), மிஸ்பா உல் ஹக் 61 ரன்கள் (59, 2) எடுத்தனர். இருவரும் கடைசி இன்னிங்சில் ஆட்டமிழந்தபோது, இரு அணி வீரர்களும் அவர்களை கவுரவித்தனர்.

யூனுஸ்கான் 118 ெடஸ்ட்டுகளில் 10,099 ரன்கள், 265 ஒரு நாள் போட்டிகளில் 7,249 ரன்கள் எடுத்துள்ளார். மிஸ்பா உல் ஹக் 75 டெஸ்ட்டுகளில் 5,222 ரன்கள், 162 ஒரு நாள் போட்டிகளில் 5,122 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு அழைத்து சென்றவர்.

.

மூலக்கதை